குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை மன உளைச்சல் (35 / 100)


இந்த பாகம் 5 வாரங்களுக்கு மட்டுமே இருக்கும், ஆனால் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக உங்கள் சந்த வாழ்க்கையில் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். காதலர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆனவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சி குறைந்து இருப்பார்கள். காதலர்களுக்கு இடையே கடுமையான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரியும் சூழலும் ஏற்படலாம். இதனால் உங்களுக்கு மன அழுத்தமும் மன உளைச்சலும் ஏற்படலாம். நீங்கள் அடுத்த 5 வாரங்களுக்கு பொறுமையாக இருந்தால், விடயங்கள் மீண்டும் உங்களுக்கு சாதகமாக திரும்பும்.
உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் கூட உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். யாருடனும் அலுவலகத்திலோ அல்லது சமூக வட்டாரத்திலோ நெருங்கிய நட்பை வைத்துக் கொள்ளாதீர்கள். இது உங்கள் வாழ்க்கையை இந்த பாக காலகட்டத்தில் மிகவும் மோசமாக்கி விடலாம். நீங்கள் அத்தகைய உறவால் அவமானப்படும் சூழலும் ஏற்படலாம். நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தால், சமூக ஊடகங்களில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடிய சூழலும் ஏற்படலாம்.


நிதி மற்றும் முதலீடுகள் சார்ந்த விடயங்களில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. நீங்கள் உங்கள் உத்தியோகம், நிதி, பயணம் மற்றும் முதலீடுகள் சார்ந்த விடயங்களில் வெற்றிப் பெறுவீர்கள். ஒரு நல்ல ஆலோசகர் மற்றும் ஆன்மீக குரு அல்லது சோதிடரை அணுகி இந்த பாகத்தை கடக்க ஆலோசனைப் பெற முயற்சி செய்யலாம்.


Prev Topic

Next Topic