2018 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை இந்த மாதம் காட்டுகின்றது. சனி மற்றும் செவ்வாய் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரிப்பது உங்களுக்கு கசப்பான பணல்களை தரக் கூடும். குரு 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் பெற்றோர்களுடன் இந்த மாதத்தை நல்ல முறையில் கடக்க உதவுவார். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கின்றனர்.
சூரியன் மற்றும் புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது எதிர் பாராத பின்னடைவுகளை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஏற்படுத்த கூடும். எனினும் சனி ஏப்ரல் 18, 2018 அன்று வக்கிர கதி அடைவதால் சற்று நிவாரணம் கிடைக்கும். இந்த மாதத்தின் முதல் பாதி உங்களுக்கு சோதனை காலமாகவே இருக்கும். எனினும் அதன் பின் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.



Prev Topic

Next Topic