2018 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற நிலையை இந்த மாதம் உங்களுக்கு காட்டுகின்றது. புதன் மற்றும் சூரியன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. மேலும் குரு 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாள் நல்ல பலன்களை தருவது சந்தேகமே.
சனி மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் ஜென்ம சனியின் தாக்கத்தை இந்த மாதம் அதிகம் காண்பீர்கள். மேலும் ராகு 8ஆம் வீட்டிலும் கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது நல்ல நிலைபாட்டை காட்டவில்லை. இந்த மாதம் உங்களுக்கு சோதனை நிறைந்த காலகட்டமாக இருக்கும். எனினும் அடுத்த 6 வாரங்கள் கழித்து அதாவது மே 1௦ வாக்கில் ஓரளவிர்க்காயினும் நிவாரணம் கிடைக்கும். கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்வதால் நீங்கள் மனோ பலத்தை அதிகரித்து இந்த காலகட்டத்தை கடக்கலாம்.



Prev Topic

Next Topic