2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது உங்களுக்கு ஆகஸ்ட் 15, 2018 வரை நல்ல பலன்களை தரும். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், புதன் 6ஆம் வீட்டிலும் வக்கிர கதி அடைவது உங்களுக்கு சில பதற்றத்தை கொடுக்க கூடும். எனினும் மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர்.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் சனி பகவான் 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்தது உங்களுக்கு ராஜா யோகத்தை தருவதோடு மற்று கிரகங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு ஒரு பொற்காலமாகவே இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் ஒரு முக்கியத்தவர் ஆனாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic