2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது உங்களுக்கு இந்த மாதம் சாதகமற்ற பலன்களை தரக் கூடும். பின்னோக்கி நகரும் புதன் ராகுவுடன் இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொடர்பு பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, அதாவது ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை.
செவ்வாய் ஆகஸ்ட் 27, 2018 அன்று வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் அதிகரிக்க கூடும். அதனால் உங்களுக்கு அதிகமான எதிர்மறை சக்திகள் தோன்றக் கூடும். எனினும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் குரு பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் முழு பலம் பெற்று இருப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக் கூடும். தாமதம், தடைகள் மற்றும் தொடர்பு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். எனினும் இறுதியில் உங்களுக்கு நேர்மறை மற்றும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic