![]() | 2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்களை தருவதில் சில தாமதம் ஏற்படலாம். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து கசப்பான அனுபவங்களை உங்களுக்கு தரக் கூடும். ராகு மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.
செவ்வாய் மற்றும் கேது இணைந்து நல்ல நிவாரணத்தை தரக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சற்று ஆறுதலான பலனை தரக் கூடும். சனி பகவான் வக்கிர கதி அடைந்து தற்போது இருக்கும் பிரச்சனைகளை அதிகப் படுத்த கூடும். மொத்தத்தில் நீங்கள் இந்த மாதம் சோதனை காலத்தில் உள்ளீர்கள். நீங்கள் சிறு நிவாரணத்தை காண வேண்டும் என்றால் 2 அல்லது 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic