2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் இடத்தில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் முதல் பகுதியை உங்களுக்கு சாதகமானதாக்கும். உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் பின்னோக்கி செல்லும் சனி பகவான் செப்டம்பர் மாதம் முதல் வாரம் மெதுவாக நகர்ந்து வக்கிர நிவர்த்தி அடைகிறார். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை.
மேலும் குரு பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இது உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும். நீங்கள் அதிக பொறுமையோடும் மனோ பலத்தோடும் இருந்து இந்த காலகட்டத்தை கடக்க வேண்டும். சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூல்வமாக உங்களுக்கு நன்மைகளை செய்வார்.



Prev Topic

Next Topic