![]() | 2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சாதகமான பலன்களை உங்களுக்குத் தரும். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும் செவ்வாய் 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். எனினும் கேது உங்கள ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து குரு 9ஆம் வீட்டிலும் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவார்கள். சனி பகவான் மற்றும் சூரியன் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இறுதி பகுதியில் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்கள்.
சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் புதன் 9ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகப் படுத்துவார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில், உடல் நலம், குடும்பம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் முதலீடுகள் போன்றவற்றில் நேர்மறை மாற்றங்களை காணலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic