![]() | 2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டிற்கு பெயரும் சூரியன் மற்றும் புதன் நல்ல நிலைபாட்டை காட்டவில்லை. சுக்கிரன் பெப்ரவரி 6, 2018 முதல் உங்கள் ஜென்ம ராசியில் நல்ல நிலைபாட்டில் உள்ளார். 1௦ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் வேலை சுமையையும் பதற்றத்தையும் அதிகரிக்க கூடும். ராகு ருன ரோக சத்ரு ஸ்தானத்திலும் கேது விரைய ஸ்தானத்திலும் இருப்பது நல்ல நிலையை காட்டுகின்றது.
9ஆம் வீட்டில் இருக்கும் குரு உங்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்புகளை கொடுப்பார். 11ஆம் வீட்டில் இருக்கும் சனி பகவான் உங்களது வாய்ப்புகளை அதிகரிப்பார். இந்த இரண்டு முக்கிய கிரகங்கள் பலமான இடத்தில் சஞ்சரிப்பது உங்களது நீண்ட கால ஆசைகளையும் எதிர் பார்ப்புகளையும் நினைவாக்க உதவும். உங்கள் உடல் நலம், குடும்பம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் முதலீடு உங்களுக்கு நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும்.
Prev Topic
Next Topic