2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் இருந்து 10ஆம் வீட்டிற்கு பெப்ரவரி 13, 2018 இடம் மாறுகிறார். செவ்வாய் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் கோபத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்க கூடும். மேலும் குரு 6ஆம் வீட்டிலும் சனி 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது பிரச்சனைகளை அதிகரிக்க கூடும். இந்த மாதம் குடும்பத்தில், உடல் நலத்தில் மற்றும் நிதி நிலையில் அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் உத்தியோகம் பாதிக்க கூடும்.
எனினும் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் பிரச்சனைகளுக்கு ஆறுதலான பலன்களை தரக் கூடும். எதிர் மறை சக்த்திகள் அதிகமாக இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு கடுமையான சோதனை நிறைந்ததாகவே இருக்கும். சாதகமற்ற சூழ்நிலையை சமாளிக்க உங்கள் மனோ பலத்தை அதிகரித்து கொள்வது அவசியம்.



Prev Topic

Next Topic