Tamil
![]() | 2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவதை குறிக்கின்றது. வேகமாக நகரும் புதன் மற்றும் சுக்கிரன் இந்த மாதம் உங்கள் ராசியில் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் ஜூன் 27, 2018 வாக்கில் உச்சம் பெறுவதால் பல சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. எனினும் குரு வக்கிர நிவர்த்தி அடைவதின் பலன்களை நீங்கள் ஜூன் 25, 2018வாக்கில் உணரலாம். இந்த அமாதத்தின் தொடக்கம் அவ்வளவாக சிறப்பாக இல்லை என்றாலும், நாட்கள் நகர நகர நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் வரும் மாதங்கள் உங்களுக்கு மிக சிறப்பான பலன்களை தர உள்ளது.
Prev Topic
Next Topic