Tamil
![]() | 2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது அவ்வளவாக சிறப்பான பலனை தராது. ராகு கேதுவிடம் இருந்து நீங்கள் பெரிய பலன்கள் எதிர் பார்க்க முடியாது. சனி பகவான் வக்கிர கதி அடைவதால் அதிக தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குரு உங்கள் ஜென்ம ராசியில் பலவீனமாக உள்ளார். இது இந்த மாதம் முழுவதும் கசப்பான அனுபவங்களையே உங்களுக்கு தரும்.
கேது மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தச்டமா ச்தனத்தில் சஞ்சரிப்பது பல பிரச்சனைகளை உருவாக்க கூடும். விரைவாக நகரும் கிரகங்களான புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிகின்றனர். இதனால் இந்த கடுமையான சூழ்நிலையிலும் சில ஆறுதலான விசயங்கள் நடக்க கூடும். அடுத்த சில மாதங்களுக்கு நீங்கள் சோதனை காலத்தை எதிர் கொள்ள நேரிடும்.
Prev Topic
Next Topic