![]() | 2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஜூன் 15, 2018 வரை சிறப்பாக உள்ளது. புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் வக்கிர கதி அடைகிறார். குரு 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடைகிறார். இதனால் அடுத்த சில வாரங்களுக்கு உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
செவ்வாய் மற்றும் கேது உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் இணைந்து சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல செய்தியே. இந்த மாதம் உடல் நலம், நிதி, உத்தியோகம், குடும்பம் ஆகிய விசயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். எனினும் ஜூலை மாதம் முதல் நீங்கள் பெரிய சோதனை காலத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் ஜூன் 27, 2018க்கு முன் உங்களுக்கு கிடைக்கும் பலன்களை பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவதை பற்றி சிந்தியுங்கள்.
Prev Topic
Next Topic