Tamil
![]() | 2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மார்ச் 15, 2018 முதல் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. மேலும் ஜென்ம கேது மற்றும் களத்திர ஸ்தான ராகு அவ்வளவாக சிறப்பாக இல்லை. 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்களுக்கு சாதகமான பலன்களை தர உள்ளார். குரு உங்கள் ராசியின் 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சில நிவாரணத்தை உங்களுக்கு தர உள்ளது.
உங்கள் ராசியின் விரைய ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சனி சஞ்சரிப்பது சற்று பலவீனமான நிலைபாட்டை காட்டுகின்றது. இதனால் உங்களுக்கு சில ஏமாற்றங்களும் நிதி பிரச்சனைகளும் வரக் கூடும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு ஒரு கலவையான பலன்களே கிடைக்க உள்ளது.
Prev Topic
Next Topic