2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


மார்ச் 15, 2018 அன்று சூரியன் கும்ப ராசியில் இருந்து மீனா ராசிக்கு இடம் மாறுகிறார். ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் சஞ்சரிப்பார்கள். சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் சிறப்பான நிலைபாட்டில் இருப்பார்.
1. மார்ச் 17, 2018 செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார்
2. குரு மார்ச் ௦9, 2018 அன்று துலாம் ராசியில் வக்கிர கதி அடைகிறார்
3. புதன் மார்ச் 24, 2018 அன்று மீன ராசியில் வக்கிர கதி அடைகிறார்
4. சனி மற்றும் செவ்வாய் மார்ச் 2, 2018 அன்று இணைத்து பலன்களை தர தொடங்குவார்கள், எனினும் அதனை மார்ச் 27, 2018ற்கு மேல் தான் உணர முடியம்
இந்த மாதம், குரு வக்கிர கதி அடைவது தான் முக்கிய நிகழ்வாக இருக்கும். அதனை தொடர்ந்து சனி மற்றும் செவ்வாய் இணைத்து பலன்களை தரப் போவதும் புதன் வக்கிர கதி அடைவது முக்கிய நிகழ்வாக இந்த மாதம் இருக்கும். அதனால் இந்த மார்ச் மாதம் முழுவதும் தொடர்ந்து பல முக்கிய நிகழ்வுகளை எதிர் பார்க்கலாம். முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதால் பல மாற்றங்களை இந்த மாதம் காண முடியும்.

பங்கு சந்தை பல ஏற்ற இறக்கங்களை காணலாம். குறிப்பாக மார்ச், 28, 2018 வாக்கில் பங்கு சந்தையில் இறக்கங்களை காணக் கூடும். பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அவர்களது CBOE VIX – Volatility ETF funds மீது அதிக கவனம் வைப்பது அவசியம். மார்ச் 1.5, 2018ற்கு மேல் பல நாடுகளுக்கு மத்தியில் அரசியல் பதற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தகவல் பரிமாற்றங்களில் பல தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. IT துறையில் பனி புரிவோர்கள், மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் பனி புரிவோர்களுக்கு இது ஒரு கடினமான காலகட்டமாகும். கோச்சார கிரகங்களின் நிலைப்பாட்டால் புதிய பொருட்கள் அல்லது சேவை அறிமுகப் படுத்துவதில் தாமதம் ஏற்படக் கூடும். இந்த மாதத்தின் இறுதியில் சில இடங்களில் நில நடுக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.