![]() | 2018 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 15, 2018 அன்று சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதே நாளில் சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார். புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மே 1௦, 2018 அன்று இடம் மாறுகிறார். ராகு கடக ராசியிலும், கேது மகர ராசியிலும் சஞ்சரிப்பார்கள்.
செவ்வாய் மே 2, 2018 அன்று மேன்மை பெற்று மகர ராசியில் அடுத்த 6 மாதங்களுக்கு சஞ்சரிப்பார். செவ்வாய் மற்றும் கேது இணைந்து சந்தரிப்பது அவ்வளவு சிறப்பான பலன்களை தருவது சந்தேகமே. இதனால் பலருக்கு இந்த உலகத்தில் பல பிரச்சனைகள் வரக் கூடும். பங்கு சந்தை தொடர்ந்து நிலையற்ற நிலையில் இருக்கும். மேலும் ரியல் எஸ்டேட் விலையில் சில மாற்றங்கள் ஏற்படக் கூடும். அதிகமான ஏற்ற தாழ்வுகள் மற்றும் மிகைப்படுத்திய சூழல்கள் நிலவக் கூடும். பங்கு சந்தையில் முதலீடு செய்து ஓரளவிர்க்காயினும் லாபம் காண வேண்டும் என்றால் உங்கள் மகா தசை பலத்தோடும் உங்களுக்கு சாதகமானதாகவும் இருக்க வேண்டும்.
குரு மற்றும் சனி ஆகிய முக்கிய கிரகங்கள் இந்த மாதம் முழுவது வக்கிர கதி அடைந்தே காணப் படுவார்கள். அடுத்த 6 மாதங்களில் செவ்வாய் மற்றும் கேது இணைந்து 3 முறை சஞ்சரிப்பார்கள். அவர்களின் முதல் சஞ்சாரும் ஜூன் 14, 2018 அன்று நிகழும். இந்த சஞ்சாரத்தின் தாகத்தை மே மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து உணர முடியும். மேலும் செவ்வாய் மற்றும் கேது இணைந்து சஞ்சரிப்பதால் மனிதர்களால் பல பாதிப்புகளும் பேரழிவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகளும் காணப் படுகின்றது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic