2018 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டிற்கு நகருவது அவ்வளவாக சிறப்பாக இல்லை. வக்கிர கதி அடையும் புதன் தொடர்பு விசயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது பதற்றத்தை அதிகப் படுத்தக் கூடும்.
எனினும் மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். குரு உங்கள் ராசியின் பூர்வ புண்ய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்ட்டத்தை உங்கள் வாழ்க்கையில் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எந்த தடையும் இல்லாமல் செய்வார். மொத்தத்தில் இது உங்களுக்கு அதிர்ச்ட்டம் நிறைந்த சிறப்பான மாதமாக அமையும்.



Prev Topic

Next Topic