2018 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. செவ்வாய் அர்தாஷ்டம ஸ்தானத்தை விட்டு நகருவது நல்ல பலன்களைத் தரும். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் இல்லை. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை தரும். புதன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களது கடந்த கால பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரிப்பது உங்கள் உத்தியோகத்தில் பெரிய அளவில் வெற்றியைத் தரும். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிபப்து இந்த மாதத்தில் நாட்கள் நகர நகர பண மலையை பொழியும். நவம்பர் 19, 2018 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் புகழ் பெற்று முக்கியத்தவர் அந்தஸ்த்தை அடைவீர்கள்.



Prev Topic

Next Topic