2018 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவாக சிறப்பாக இல்லை. செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை தரும்.கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். ராகு மற்றும் புதன் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார்கள்.
குரு உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். இது உங்களது சோதனை காலம் முற்றிலுமாக முடிந்ததை உறுதிப் படுத்துகிறது. இந்த மாதத்தில் நாட்கள் நகர நகர நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நவம்பர் 18, 2018 வாக்கில் நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும்.



Prev Topic

Next Topic