2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


அக்டோபர் 18, 2018 முதல் சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். செவ்வாய் மற்றும் கேது இணைத்து உங்களது ஜென்ம ராசியில் தொடர்ந்து சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிக்க கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் வாழ்க்கை துணைவருடன் தேவையற்ற வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கும்.
சனி பகவான் உங்களுக்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி தூக்கம் இல்லாத இரவுகளை தரக் கூடும். எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் லாப ஸ்தானத்திற்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுவது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். இந்த மாதத்தின் 3ஆம் வாரத்தில் இருந்து உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். பிரச்சனைகளின் தாக்கம் இந்த மாதத்தில் நாட்கள் நகர நகர குறையும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic