![]() | 2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
அக்டோபர் 18, 2018 அன்று சூரியன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இருந்து 12ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது சிறப்பாக இல்லை.சுக்கிரன் மற்றும் குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களது செலவுகளை அதிகரிக்க கூடும். புதன் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார். செவ்வாய் மற்றும் கேது இணைந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்கள்.
நீங்கள் தற்போது ஏழரை சனியின் கடைசி பாகத்தில் இருக்கின்றீர்கள். குரு உங்கள் ஜென்ம ராசிக்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுகிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் சற்று கசப்பான அனுபவங்கள் ஏற்படுவதோடு உங்கள் வளர்ச்சியும் பாதிக்கப் படக் கூடும். நீங்கள் அக்டோபர் 3௦, 2018 முதல் முற்றிலுமாக சோதனை காலத்தில் இருப்பீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நீங்கள் உங்களது பிறந்த சாதக பலனை பார்ப்பது அவசியம்.
Prev Topic
Next Topic