2018 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக பதற்றத்தை உருவாக்க கூடும். ஜென்ம குருவின் பாதிப்புகள் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு இருக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு இடம் மாறுவது ஜென்ம குருவின் தாக்கத்தை சற்று குறைக்க உதவும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களை உங்களுக்கு தருவார். மேலும் வரவிருக்கும் குரு பெயர்ச்சி அக்டோபர் 11, 2018 அன்று உங்களுக்கு சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இந்த மாதம் நேர்மறை சக்த்திகள் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உங்களது சோதனை காலத்தை விரைவாக கடந்து வந்துவிடுவீர்கள். இந்த மாதத்தில் நாட்கள் முன்னேற பெரிய அளவில் வெற்றியை எந்த ஒரு தடையும் இன்றி பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic