2018 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் செப்டம்பர் 15, 2018 வரை உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிலும் சுக்கிரன் 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தரும். கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நண்பர்களின் உறுதுணையும் அவர்களின் உதவியும் கிடைக்க உதவும். புதன் இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார்.
வேகமாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் உங்களால் பெரிதாக நேர்மறை பலன்களை காண முடியாது. இது அஷ்டம குரு நடப்பதால் இந்த மாதம் உங்களுக்கு சற்று சோதனை நிறைந்ததாக இருக்கக் கூடும். மேலும் சாதகமற்ற நிலையில் சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார்.


இத்தகைய நிலைப்பாடு உங்கள் மன வலியையும் மன அழுத்தத்தையும் அதிகப் படுத்தும். எனினும் உங்களுக்கு ஒரு நல்ல செய்து என்னவென்றால் நீங்கள் அடுத்த ஒரு 6 முதல் 8 வாரங்கள் பொறுத்திருந்தால் உங்களது சோதனை காலம் முடிந்து நீங்கள் மீண்டும் உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவீர்கள்.


Prev Topic

Next Topic