![]() | 2019 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தராது. ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்க உதவுவார். புதன் தொடர்ந்து இந்த மாதம் உங்களுக்கு பிரச்சனைகளைத் தருவார். சனி பகவான் மற்றும் கேது இணைந்து ஆகஸ்ட் 28, 2019 வரை நல்ல பலன்களைத் தருவார்கள்.
செவ்வாய் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல மற்றும் மோசமானப் பலன்களை கலந்து தருவார்கள். எனினும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பண மலையை தருவார். இந்த அதிர்ஷ்டம் சிறிது காலத்திற்கு மட்டுமே. நீங்கள் விரைவாக செயல் பட்டு உங்கள் அதிர்ஷ்டத்தை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்த 6 வாரங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. எனினும் ஏழரை சனியின் தாக்கம் செப்டம்பர் 15, 2019க்கு மேல் அதிகமாக இருக்கும். சனி பகவான் உங்களுக்கு தந்த அதிர்ஷ்டம் இதோடு குறைந்து விடும், அதன் பின் நீண்ட காலத்திற்கு சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic