![]() | 2019 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 8ஆம் வீடு மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் மற்றும் கேது ஜென்ம ராசியில் சஞ்சரிபப்து சிறப்பாக இல்லை. புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சற்று நிவாரணத்தை தருவார். சுக்கிரன் இந்த மாதத்தின் இறுதி பகுதியில் உங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பாதிக்கக் கூடும், குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் நீங்கள் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த உதவுவார். எனினும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் சுப காரியங்கள் நடக்கும் போது ஏற்படுத்தக் கூடும்.
ஆகஸ்ட் 28, 2019 முதல் சனி பகவான் வேகம் குறைந்து உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடைவதால், உங்கள் வாழ்க்கை மேலும் மோசமாகக் கூடும். நீங்கள் ஜென்ம சனியால் இந்த மாதத்தின் இறுதி பகுதியில் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் உடல் நலம், குடும்பம், உறவுகள், உத்தியோகம் மற்றும் நிதி ஆகிய விடயங்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், விடயங்கள் தவறாக போகக் கூடும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க வேண்டும்.
Prev Topic
Next Topic