2019 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதத்தின் இரண்டாம் பத்தி நல்ல பலன்களை தர உள்ளது. புதன் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும், 4ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து அதிக பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை தரக் கூடும்.
குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று பிரச்சனைக்குரியதாக இருக்கும். எனினும், சனி பகவான் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்களுக்கு குருவின் தாக்கத்தை தாக்கு பிடிக்க உதவியாக இருப்பார்கள். மேலும் உங்களது பொற்காலம் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அதிக எதிர்மறை சக்திகள் இந்த மாதம் உங்களுக்கு உண்டாகக் கூடும்.


நீங்கள் முன்பே ஒரு காரியத்தை தொடங்கி இருந்தால், அதில் நல்ல பலனைப் பெறுவீர்கள். எனினும், நல்ல பலனைப் பெற வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதில் விழிப்புணர்வோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். சனி பகவான் ஜனவரி 23, 2020 அன்று அடுத்த ராசிக்கு பெயர்ந்த பின், நீங்கள் சோதனை காலத்தை சந்திக்க நேரிடும்.


Prev Topic

Next Topic