2019 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இரண்டாம் பாதி உங்களுக்கு சாதகமாக உள்ளதை காட்டுகின்றது. ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த பலனையும் எதிர் பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார். புதன் சிறப்பான இடத்தில் சஞ்சரிகின்றார்.
எனினும், ஒரு பலவீனமான விடயம் என்னவென்றால், முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தான். இந்த சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலனைத் தந்தாலும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்களுக்கு பதற்றமான நிலையை உண்டாக்கக் கூடும். அதனால், இந்த மாதம் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம.


எனினும், அடுத்த சனி பெயர்ச்சி ஜனவரி 23, 2020 அன்று நடை பெறுவதால், உங்களுக்கு டிசம்பர் 27, 2019 முதலே நற்பலன்கள் உண்டாகத் தொடங்கும். இந்த மாதம் உங்களுக்கு சற்று மந்தமாக தொடங்கினாலும், இந்த மாதத்தின் இறுதி பகுதி உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் அடுத்த சில ஆண்டுகள், ஜனவரி 2020 முதல் முக்கிய கிரகங்கள் சிறப்பான நிலையில் சந்ச்ரிபப்தால், சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic