![]() | 2019 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். புதன் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலனைத் தருவார்.
ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து சில உடல் உபாதைகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், விடயங்கள் மேலும் மோசமாகக் கூடும். ஜென்ம குரு மற்றும் ஜென்ம சனி, இரண்டுமே உங்களுக்கு ஒரே நேரத்தில் நடக்கவிருகின்றது.
எதிர் பாரா விதமாக, இந்த மாதம் டிசம்பர் 2019 இந்த ஆண்டின் ஒரு மோசமான மாதமாக இருக்கக் கூடும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையின் இந்த மோசமான காலகட்டத்தை கடக்க வேண்டும். இந்த மாதம் நீங்கள் கடவுள், சோதிடம் போன்றவற்றை புரிந்த கொள்ள உதவும் மாதமாக இருக்கும் .
Prev Topic
Next Topic