2019 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தின் முதல் பாதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். சனி பகவான் மற்றும் புதன் இணைந்து உங்களுக்கு இந்த மாதம் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர்.
செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் இந்த மாதம் சஞ்சரிப்பார். இது உங்களுக்கு சற்று பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை தரக் கூடும். எனினும் ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால் குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதுதான், இதனால் உங்கள் உத்தியோகம் சற்று பாதிக்கக் கூடும். எனினும் அது உங்கள் உடல் நலத்தை, குடும்பத்தை, நிதி நிலை மற்றும் உறவுகளை பெரிதும் பாதிக்காது.



Prev Topic

Next Topic