2019 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இந்த மாதம் பெயருகிறார். ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் சஞ்சரிப்பார்கள். எனினும் வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி தாக்கங்களை ஜனவரி 7, 2019 முதல் உணரலாம் .
புதன் தனுசு ராசியில் இந்த மாதம் சஞ்சரிப்பார். அதன் பின் விரைவாக நகர்ந்து மகர ராசிக்கு பெயர்ந்து இந்த மாதத்தின் மத்தியில் இருந்து செயல் இழந்து இருப்பார். சுக்கிரன் இந்த மாதத்தின் அனேக நாட்கள் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். செவ்வாய் மீன ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் 18 டிகிரி முதல் 24 டிகிரி வரை சஞ்சரிப்பார். சனிபகவான் மந்தமாக/ செயல் இழந்த நிலையில் இந்த மாதத்தின் மத்தி வரை இருப்பார்.
சனி பகவான் செவ்வாயோடு கேந்திர ஸ்தானத்தில் ஜனவரி 19, 2019ல் சஞ்சரிப்பார்


குரு மற்றும் சுக்கிரன் ஜனவரி 21, 2019ல் இணைந்து சஞ்சரிப்பார்கள்
குரு மற்றும் செவ்வாய் திரிகோண ஸ்தானத்தில் ஜனவரி 25, 2019 வாக்கில் சஞ்சரிப்பார்கள்
சூரியன் மற்றும் புதன் ஜனவரி 29, 2019 வாக்கில் இணைந்து சஞ்சரிக்கின்றனர்


மேல் கூறப்பட்ட மாற்றங்கள் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை சில ராசிகள் பெறவிருக்கும் பலன்களில் ஏற்படுத்தக் கூடும். மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குறுகிய காலகட்டத்தில் நடப்பதால் பங்கு சந்தையில் பெரிய மாற்றங்கள் நடக்கும். நீங்கள் நாள் வர்த்தகம் செய்பவராக இருந்தால் உங்கள் லாப நட்டத்தில் பெரிய ஏற்றம் இறக்கம் ஏற்படும். உங்கள் கோசார கணிப்பை பார்த்து உங்கள் கிரகங்கள் மற்றும் நட்சத்திர பலன்களை பார்த்து உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தையும் கணித்து பின் ரிஸ்க் எடுத்து முதலீடுகள் செய்வது நல்லது.

Prev Topic

Next Topic