2019 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூன் 16, 2019 முதல் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து ஏழரை சனியின் தாக்கத்தை குறைப்பார்கள். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூன் 22, 2019 வரை நல்ல அதிர்ஷ்ட்டத்தை தருவார்கள்.
சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை மகிழ்ச்சி அடைய செய்வார். கேது உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனோ பலத்தை பெற உதவுவார். வக்கிர கதி அடையும் குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சனையும் தர மாட்டார். இது உங்களுக்கு மற்றுமொரு நல்ல மாதமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.





Prev Topic

Next Topic