2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் கும்ப ராசி மற்றும் மீன ராசியில் இந்த மாதம் சஞ்சரிப்பார். ராகு கேது பெயர்ச்சி 19 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. மார்ச் 09, 2019 அன்று ராகு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயருகிறார். கேது மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயருகிறார். இது இந்த மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வாகும்.
புதன் மார்ச் 05, 2019 அன்று மீன ராசியில் வக்கிர கதி அடைகிறார், அதன் பின் மார்ச் 15, 2019 அன்று கும்ப ராசிக்கு மீண்டும் பெயருகிறார். புதன் மார்ச் 28, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் தொடர்பு விடயங்களில் தாமதம் ஏற்படலாம்.
மார்ச் 22, 2019 அன்று சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயருகிறார். செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயருகிறார்.
மார்ச் 26, 2019 அன்று குரு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதி சரமாய் பெயருகிறார். முக்கிய கிரகங்கள் பெயருவதால் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக இது கருதப் படுகிறது.
மேலும் சனி பகவான், குரு மற்றும் கேது இணைந்து தனுசு ராசியில் மார்ச் 26, 2019 முதல் ஒரு மாத காலத்திற்கு ஏப்ரல் 25, 2019 வரை சஞ்சரிக்கின்றனர். அதனால் கிரகங்களின் நிலையில் மார்ச் 22, 2019 முதல் மார்ச் 31, 2019 வரை மாற்றங்கள் ஏற்படக் கூடும். இதனால் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும். மேலும் இந்த நிலைப்பாடு பங்கு சந்தையில் பெரிய அளவு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.