2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7அம வீட்டில் இந்த மாதத்தின் முதல் பகுதியில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகிறது. செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் மார்ச் 22, 2019 வரை சஞ்சரித்து உங்கள் கோபத்தை அதிகப் படுத்தக் கூடும். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும் சனி பகவான் 4ஆம் வீட்டிலும் சஞ்சரித்து தொடர்ந்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தரக் கூடும்.
எதிர் பாரா விதமாக ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. சுக்கிரன் மற்றும் புதன் இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார்கள். இந்த மாதம் உங்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கும். குரு தனுசு ராசியில் அதி சரமாய் சஞ்சரித்து மார்ச் 28, 2019க்கு மேல் உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்கக் கூடும்.



Prev Topic

Next Topic