Tamil
![]() | 2019 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1ஆம் வீட்டில் இருந்து 2ஆம் வீட்டிற்கு மே 15, 2019 அன்று பெயருகிறார். இது சாதகமற்ற நிலையை இந்த மாதம் உங்களுக்கு காட்டுகிறது. புதன் மற்றும் சுக்கிரன் இந்த மாதத்தின் முதல் பாதியில் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. சனி பகவான் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்த மாட்டார். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு மே 7, 2019 அன்று பெயருவது உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும்.
மே 17, 2019 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து தற்காலிகமாக உங்களுக்கு நிவாரணம் தருவார். நீங்கள் தொடர்ந்து இந்த மாதம் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
Prev Topic
Next Topic