Tamil
![]() | 2019 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது ஏழரை சனியின் தாக்கத்தை சற்று குறைக்கும். செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பான செய்த்யாகும். அதிக நேர்மறை சக்திகளை பெறுவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
கேது உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு நல்ல மனோ பலத்தை தருவார். உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் குரு அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடும். மொத்தத்தில் இந்த மாதம் நேர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Prev Topic
Next Topic