![]() | 2019 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் உச்சம் பெற்று உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தை தருவார். செவ்வாய் உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் இருந்து மே 7, 2019 அன்று நகருகிறார். இதனால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும் கேது 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் இருந்து பெயர்ந்து வக்கிர கதி அடைவது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். சனி பகவான் வக்கிர கதி அடைவதால் உங்கள் வளர்ச்சியை பாதிக்க மாட்டார். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும் 1ஆம் வீட்டிலும் சஞ்சரித்து சிறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். மொத்ததில் இந்த மாதம் கடந்த மாதத்தை விட சற்று நல்ல பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.
Prev Topic
Next Topic