2019 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை இந்த மாதம் முழுவதும் தருவார். புதன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இருப்பது நல்ல பலனைத் தரும். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு வேலை சுமையையும், பதற்றத்தையும் தரக் கூடும். குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து விரிய செலவுகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் குரு, சுக்கிரன் மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் நவம்பர் 21, 2019 முதல் சஞ்சரிப்பார்கள். இந்த சஞ்சரிப்பு உங்கள் நிதி நிலையில் சவால்களை உண்டாக்கக் கூடும்.


எதிர்பாராவிதமாக , ஏழரை சனியின் தாக்கம் இந்த மாதம் அதிகமாக உணரக் கூடும். கடந்த 2 ஆண்டுகளில் நீங்கள் ஓரளவிற்கு ஏழரை சனி காலத்தை கடந்து வந்து விட்டீர்கள். மேலும் 5 ஆண்டு காலத்தை கடக்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகள் உங்களுக்கு சற்று கடினமான காலமாக இருக்கலாம். அதனால் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic