2019 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு சாதகமான பலனைத் தருவார். சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், உங்களுக்கு சிறு உடல் நல பிரச்சனைகளையும், உங்கள் உறவுகளுக்குள் கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்கக் கூடும். புதன் வக்கிர கதி அடைத்து உங்களுக்கு கிடைக்கவிருக்கும் சாதகமான பலன்களை தாமதப் படுத்தக் கூடும். ராஉ உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சந்தரித்தும், கேது களத்திற ஸ்தானத்தில் சஞ்சரித்தும் உங்களுக்கு தடைகளை உண்டாக்கக் கூடும்,.
செவ்வாய் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியை உண்டாக்குவார். சனி பகவான் மற்றும் கேது உங்களுக்கு தற்போது விலகி சஞ்சரிப்பதால் நல்ல நிவாரணத்தை உண்டாக்குவார்கள். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 7ஆம் வீடிக்று பெயர்ந்து உங்களுக்கு முழு பாதுகாப்பை தந்து, நல்ல பலன்களையும் தருவார்.


உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல நேர்மறை மாற்றங்களும், விரைவான முன்னேற்றமும் உண்டாகும். எனினும், உங்கள் குடும்ப பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும், அடுத்த ஓரிரு மாதங்களுக்கு பிரச்சனைகளின் தாக்கம் குறைவாக இருக்கும். நவம்பர் 21, 2019 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.


Prev Topic

Next Topic