2019 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார். புதன் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயர்வுதால் உங்களுக்கு ஏமாற்றங்களை தரக் கூடும். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து, உங்கள் உறவுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
ஜென்ம சனி காலம் என்பதால், நீங்கள் கடுமையான காலகட்டத்தை சந்திக்க நேரிடும். எதிர் பாரா விதமாக, குரு சனி பகவானுடன் இணைந்து சஞ்சரித்து, உங்கள் வாழ்க்கையை தற்போது இருக்கும் நிலையில் இருந்து மேலும் மோசமாக்கக் கூடும். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் மிக அதிகமான அளவு இருக்கக் கூடும்.


உங்களுக்கு ஒரு நிவாரணம் என்னவென்றால், செவ்வாய், உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தான். இதனால் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு சில உதவிகளை செய்வார்கள். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்து, உங்கள் வாழ்க்கையின் இந்த மோசமான காலகட்டத்தை கடக்க வேண்டும். இந்த மாதம் நீங்கள் கடவுள் வழிபாடு, ஆன்மிகம், சோதிடம் போன்றவற்றின் அருமையையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வீர்கள்.


Prev Topic

Next Topic