![]() | 2019 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிபப்து சிறப்பாக இல்லை. உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடைகிறார். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு நவம்பர் 10, 2019 அன்று பெயருகிறார், இதனால் உங்களுக்கு சில ஏமாற்றங்கள் ஏற்படக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து, உங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை முற்றிலும் நிறுத்தி விடுவார். குரு மற்றும் கேது இணைந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். குரு சனி பகவானோடு இணைந்து சஞ்சரிப்பதால், நீங்கள் ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விலகப் போகின்றீர்கள் என்பதற்கான முதல் அறிகுறியாகும்.
உங்கள் அதிர்ஷ்டத்தில் நலல் ஒரு மாற்றம் ஏற்படும். உங்களுக்கு இந்த மாதம் நாட்கள் நகர நகர நல்ல நேர்மறை சக்திகள் உன்காகும். உடல் நலம், குடும்பம், உறவுகள், உத்தியோகம், நிதி நிலை, முதலீடுகள் போன்றவற்றில் நல்ல திருப்பம் ஏற்படும். உங்களுக்கு நவம்பர் 21, 2019 வாக்கில் நல்ல செய்திகள் வரும்.
Prev Topic
Next Topic