2019 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் இந்த மாதம் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. புதன் இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் அதிக பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு நவம்பர் 10, 2019 அன்று பெயருவது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.
சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று மோசமான நிலையை காட்டுகின்றது. குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2019 அன்று பெயருகின்றார். இது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கக் கூடும். முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், மேலும் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் சுனாமியே ஏற்படக் கூடும். இந்த மாதம் இந்த ஆண்டில் உங்களுக்கு ஒரு மோசமான மாதமாக இருக்கக் கூடும். நவம்பர் 16, 2019 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்தி வரக்கூடும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic