2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


அக்டோபர் 17, 2019 வரை சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள். சுக்கிரன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான நல்ல செய்திகளை கொண்டு வருவார். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து பல மடங்கு உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்துவார்.
சனி பகவான் கேதுவுடன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகப்படுத்துவார். முக்கிய கிரகங்கள் சிறப்பான நிலையில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் செய்யும் எந்த விடயமாக இருந்தாலும், அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.


உங்கள் கோச்சார கிரகங்களின் அமைப்பு படி, இது போன்ற ஒரு சிறப்பான நேரத்தை நீங்கள் காண முடியாது. எனினும் உங்கள் வளர்சியும், வெற்றியும் உங்கள் பிறந்த சாதகம் மற்றும் நடக்கும் மகா தசையை பொறுத்தே இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தைப் பெறுவீர்கள். இந்த மாதத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். வரவிருக்கும் குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி, இரண்டுமே உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை.


Prev Topic

Next Topic