2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) | |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. புதன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து சில தடைகளையும், தாமதங்களையும் உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக பதற்றத்தை உண்டாக்கக் கூடும், எனினும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்.
மேலும் சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகரிப்பார்கள். அக்டோபர் 12, 2019 முதல் அக்டோபர் 24, 2019 வரை உங்களுக்கு எதிர்பாராத செல்வம், பூர்வீக சொத்துக்கள் மற்றும் அதிஷ்ட சீட்டில் வெற்றி பெறுவது என்று பல நல்ல விடயங்கள் நடக்கும். எனினும், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனும் இருக்க வேண்டும்.
இந்த மாதம் உங்கள் கோச்சார கிரகங்களின் அடிப்படையில், ஒரு நல்ல மாதமாக இருக்கும். வரவிருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். மேலும் தானம் தர்மம் செய்து நல்ல பலன்களை அதிகரித்துக் கொள்ளுங்கள். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயருவதால், அடுத்த மாதத்தில் இருந்து சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.