2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு சாதகமான நிலையில் சஞ்சரிகின்றார். புதன் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக செலவுகளை உண்டாக்குவார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்வார்.
எனினும் இந்த மாதம் ஏழரை சனி மற்றும் ஜென்ம குருவால் உங்களுக்கு சில கசப்பான அனுபவங்கள் உண்டாகலாம். ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் நிதி பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும், உங்களுக்கு அக்டோபர் 17, 2019 வாக்கில் சாதகமற்ற செய்திகள் வரக் கூடும். நீங்கள் இந்த சோதனை காலத்தை கடக்க உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.


முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், வரும் குரு பெயர்ச்சியில், குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து, உங்களுக்கு மீண்டும் நல்ல அதிஷ்டத்தை கொண்டு வருவார்கள். உங்களுக்கு அக்டோபர் 25, 2019க்கு மேல் குரு பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் உண்டாகும்.


Prev Topic

Next Topic