2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அக்டோபர் 17, 2019 முதல் சிறப்பாக உள்ளது. புதன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார். எனினும், சுக்கிரனிடம் இருந்து எந்த பலன்களையும் எதிர் பார்க்க முடியாது. ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது 8ஆம் வீட்டிலும் தொடர்ந்து சஞ்சரித்து அதிக தடைகளை உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்குவார்.
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். எனினும் சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து, குருவால் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை குறைப்பார். அதனால், விடயங்கள் சற்று தேக்கம் அடையலாம். மேலும் உங்களால் சுமூகமாக முன்னோக்கி நகர முடியாமல் போகலாம். நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும்.
எதிர்பாரா விதமாக, நவம்பர் நவம்பர் 4, 2019 அன்று ஏற்படும் குரு பெயர்ச்சி உங்களுக்கு கசப்பான அனுபவகங்களை தரக் கூடும். இந்த தாக்கத்தை இந்த மாதமே நீங்கள் உணருவீர்கள். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே உங்கள் சோதனை காலம் தொடங்கி விடலாம். அதனால் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், எந்த ரிஸ்க்கும் எடுக்கக் கூடாது. இந்த 2019ல் மீதமுள்ள நாட்கள் உங்களுக்கு மோசமான பலனை தரக் கூடும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.