2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சாதகமான நிலையில் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் இருப்பார். புதன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சஞ்சரிப்பார். இதனால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரக் கூடும். சுக்கிரன் உங்கள் ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு செப்டம்பர் 10, 2019 வாக்கில் பெயர்ந்து உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும்.
சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 24, 2019 வாக்கில் பெயர்ந்து சற்று நிவாரணம் தருவார். இந்த மாதம் நேர்மறை சக்திகள் குறைந்து காணப்படுகின்றது. எதிர்பாரா விதமாக இந்த மாதம் பெரிதாக எந்த நிவாரணமும் கிடைக்காது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் இந்த மாதம் அவமானப் படும் சூழலோ அல்லது உங்கள் நற்பெயர் பாதிக்கப்படும் சூழலோ உண்டாகலாம். அக்டோபர் மாதம் முதல் உங்கள் பிரச்சனையின் தாக்கம் குறையும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic