2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் செப்டம்பர் 17, 2019க்கு மேல் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரவுள்ளது. ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து நல்ல பலன்களைத் தருவார்கள். சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் சக்தியை அதிகரிப்பார்.
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் செப்டம்பர் 18, 2019க்கு மேல் சஞ்சரித்து ராஜா யோகா பெயர்ச்சியை நிகழ்த்துவார். இவை அனைத்தும் இந்த மாதம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கப் போவதை உணர்த்துகின்றது. நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு நேர்மறை பலன்கள் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பிறந்த சாதகத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று கூறலாம். ஏனென்றால், கோச்சார கிரகங்கள் இப்படி அமைந்து உங்களுக்கு நல்ல நேரத்தை உண்டாக்குவதை எப்போதும் எதிர் பார்க்க முடியாது,.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic