![]() | 2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதத்தின் முதல் பாதி உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகின்றது. செவ்வாய் மற்றும் சுக்கிரன் சிறப்பான இடத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சஞ்சரிகின்றனர். புதன் இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். சனி பகவான் செப்டம்பர் 17, 2019 வரை வக்கிர கதி அடைந்து உங்களுக்கு உதவி செய்வார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும், கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்து சில தடைகளை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் ஏற்படவிருக்கும் பிரச்சனைகள் பெருமளவு குறையும். எனினும் முக்கிய கிரகங்கள் செப்டம்பர் 25, 2019 வாக்கில் கன்னி ராசிக்கு பெயருவதால் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கக் கூடும்.
சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் சொந்த வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை தரக் கூடும். இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு விரைவாக நகரும் கிரகங்களின் பலத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். எனினும். செப்டம்பர் 21, 2019க்கு மேல் நீங்கள் சோதனை காலத்தை சந்திக்க நேரிடும்.
Prev Topic
Next Topic