2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 17, 2019 அன்று பெயருகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 1௦, 2019 அன்று பெயருகிறார். இந்த மாதத்தின் இறுதி பகுதியில் சுக்கிரன் செயலிழந்து பலவீனமாகிறார். புதன் விரைவாக நகர்ந்து சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 11, 2019 அன்று பெயருகிறார். செவ்வாய் சிம்ம ராசியில் செப்டம்பர் 24, 2019 வரை சஞ்சரிப்பார்.


ராகு மிதுன ராசியிலும் கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள். குரு விரிச்சிக ராசியில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்குவார். இந்த மாதம் குருவின் தாக்கம் முழுமையாக உணரப் படும். சனி பகவான் செப்டம்பர் 18, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைவது இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும்.


இந்த மாதம் சிம்ம ராசியில் நான்கு கிரகங்கள், புதன், சூரியன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் சஞ்சரிக்கத் தொடங்குகின்றது. இந்த நான்கு கிரகங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கன்னி ராசிக்கு பெயருகின்றது. சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதனால் செப்டம்பர் 29, 2019 வாக்கில் பல முக்கிய நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அது முக்கியமாக இயற்கை மற்றும் மனிதர்களால் உண்டாகும் பாதிப்புகள், அரசின் புது அறிவிப்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

Prev Topic

Next Topic