2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 10ஆம் வீட்டில் செப்டம்பர் 17, 2019க்கு மேல் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகின்றது. ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து மோசமான பலன்களைத் தரக் கூடும். புதன் மற்றும் சுக்கிரன் உங்கள ராசியின் 9 மற்றும் 10ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும்.
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், செவ்வாய் 9ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் செலவுகளை பல மடங்கு அதிகரிக்கக் கூடும். விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும். சனி பகவானின் தாக்கமும், கேதுவும் இணைந்து இந்த மாதம் உங்கள் நிலையை மோசமாக்கக் கூடும். அதனால் எதிர்மறை சக்திகள் அதிகமாக உணரப் படும்.


உங்கள் வாழ்க்கையில், உடல் நலம், குடும்பம், உருவுகள், உத்தியோகம் மற்றும் நிதி நிலை என்று அனைத்திலும் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். செப்டம்பர் 12, 2019க்கு மேல் பொருளாதாரத்தில் பல பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆண்டில் வரவிருக்கும் மாதங்கள் சிறப்பாக இல்லாததால், நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன், அதிக கவனமாக இருக்க வேண்டும்.



Prev Topic

Next Topic